My Blog List

Monday, March 15, 2010

காலத்தே பயிர் செய்


பருவம் அது
பார்த்திருக்கச் சொல்லாமலே
செல்லும்

அதனாலே நீ
காலத்தே பயிர்செய்
கவலையின்றி வாழ்ந்திட

ஏழுவயதில்
ஆவலாய் இருக்கும்
பெரியவனாய் ஆக

ஆசைப்படாதே அதற்கு
ஆசைப்படு நீ
ஏழுவயதிலே வாழ

கூடி விளையாடு
குறும்புகள் செய்
கூட்டமாய் கும்மாளமடி

வேண்டியதை உண்
விரும்பியதைச்செய்
தடைபோடார் யாரும்

நன்றாய் கல்விகொள்
நயமுடன் பலதும் பயில்,
பருவம் போனால் வராது.

ஆசைப்படுவர் பலர்
காலம் கழிந்தபின்,
பள்ளிநாளையெண்ணி.

வெண்புறாவாய் பள்ளிசெல்ல
வீம்புச்ச
ண்டைபோட
வீதியில் கூடிப்பேச.

எதுவும் முடியாது
முடிந்தால் பருவம்.அதனால்
முடிந்தமட்டும் வாழு பருவத்தில்.

பின் நினைவுகளை
கனவிலே கூட்டாதே
கூடி விளையாடு நீ,

பதினாறில் நன்றாய்
படி, பதினெட்டிலும்
படி.

ஏனெனில்
செந்தக்காலுக்கு செம்மையானது
கல்வியே,

அடுத்தவரை நம்பி
அழும்போது தான் புரியுமிது
அதனால் உலகையும் கல்

சந்தோசமாய் வாழ
சகதிக்குள் விழுந்திடாமல் நீ
சாதனைகள் புரிய,

பருவத்தே பலதும் படி
பாசமுடன் வாழு
பருவத்தை விடாதே,

போனால் வராது
கனவுகளோடு போவது
பருவமே.


No comments: