My Blog List

???????????????????????

1-ரசித்தபடியே !


வெம்மையையும் தான்டி
வேர்க்கிறது மனசு
எதுவுமறியாது
அழுகிறது கண்கள்,


கண்களுக்குத் தெரியவில்லை
காதலின் வலி -ஆனாலும்
கரைக்கிறது கண்ணீரை, நீழுகின்ற
காத்திருப்புக்களோடு கலந்து.

உன்
வார்த்தைகளின் வீரியம்
தோலைக்கிழித்து கிழிஞ்சலூடு
ஊசி முனைகளாய்...

உணர்ச்சி நரம்புகளில்
ஊடுருவிப் பாய்ந்து ஓடிவழியும்
உதிரத்தின் ஊடுசென்று என்
இதயத்தில் களங்கமுண்டோ.........? என


ஐங்கோசங்களையும்
சதைப்பிண்டங்களையும் கூட
சலித்தெடுத்துத் தன்னை
நிரூபிக்க முயல்கிறது !!!

நீ பிய்த்தெறிந்த
நரம்புகளின் வழியே உயிர்
உதிரத்தினூடு உன் வீரியவார்த்தைகளைச்சுமந்து
வருந்திச் செல்வதை ரசித்தபடியே !

இதயத்தில் களங்கமுண்டோ..............?
நிரூபிக்க முயல்கிறது,
உன்
வீரிய வார்த்தைகள்.
 
 
 
2-மௌனமாய்............!




என் அருகிருந்த
நண்பனுக்கு அவன்
எதிரி வீசிய கத்தி
என் மேல் பாய்ந்தது, தவறுதலாய்,

எங்கே...... எங்கே......
எதிலே.......................
இங்கேயா......? இதயத்திலா...........?
ஜயோ..ஓ...! ரத்தம்........., நண்பனும் உறவுகளும்.


வலீ........ஈ..........
வலீ.......ஈ......, எனக்கு என்
இதயத்திலிருந்து ரத்தக் கதறல்,
வலீ.....ஈ......... விழுந்தேன்...


ஓடிக்கொண்டிருக்கும் குருதியை
அள்ளிப் பருகினேன்.....
வளித்து நக்கினேன்...., மண்ணோடுறைந்ததை
விழுந்து சுவாசிக்கிறேன்....


இது குருதி, எம் குருதி
எம் அண்ணன் அக்காமார்,
தம்பி தங்கைமார்,
நாம் உயிர் வாழக்கொடுத்த "அவர் உயிர்கள்".


நான் இறந்தால் கதறாதீர்,
மௌனமாய் செலுத்துங்கள் அஞ்சலி.
எனக்காக அல்ல,
என் மண்ணுக்காக.
 
 
3- ?????????...........




இதயம் அடைக்கும், சிலவேளை
இருண்டுவிடும் என் உலகம்.
மனிதர்களையும் பிடிக்கவில்லை,
விலங்குகள் கூட இங்கே
விரசம் தான். - இந்த


மாய உலகத்திலிருந்து
மறைந்து விடத்துடிக்கும் உள்ளம்.
இப் பொழுதுகளில் எல்லாம்
மீண்டும்


அம்மாவின் கருவறையில்
ஒழிந்து கொள்ளத்தோன்றும்.
இன்றும் அப்படியே..........
அவளிடம் கேட்டுவிட்டேன்


உன் கருவறையில் நான்
மீண்டும் துயிலப்போகிறேன்....?


அவள் கூறினாள்....


உன்னை சுமந்த -"கருவறையை"
சுமக்கப் பிடிக்காமல்
அப் பொழுதே
அதைக் களைந்து வீசிவிட்டேன்.
????????????????????????.
 
 
 
 
4-சேனாவின்" ஒண்ணரத்தோசைச் செட்டியார்






என் ஊரில ஒரு
செட்டியார் இருந்தார் -அவர்
தெந்தியும் கைத்தடியும்
துரத்தியடிக்கும் சிறுவர்களை.


ஆனால் என்
தங்கை மட்டும்
என்ன மாயம்
செய்தாளோ.......?


தொந்திக்கிழவர்
சரண்டராயிடுவார் இதன்
ரகசியத்தை பின்னொருநாளில்
ரகசியமாய் கண்டுகொண்டேன் நான்,


என் தங்கைக்கு
வயது ஒரு
ஐந்தாறு இருக்கும்,
வண்டில் விடும் வயது.


நமக்கோ மிகப் பயம்,
பள்ளிவிட்டு வரும் பாதையில்
தொந்திப் பிள்ளையாராய்
குந்தியிருந்தியிருக்கும் குறும்புக்கிழவனிடம்.


ஒண்ணரை தோசை
குடு சேனா, எனும்
செட்டியார் கிழவனுக்கு
தோசையோடு, வசியமும் வைத்திருந்தாள் கள்ளி.


அது மட்டுமா..?
அக்காவின் ஜிமிக்கியை
அவர் கிழிந்த காதுகளில்
மாட்டி அழகு பார்ப்பதும்,


நிகக் கலரை அவரின்
கழுகு நிகங்களில் பூசுவதும்,
கிழவர் மண்டையை ஆட்டி ஆட்டி
கண்ணாடியில் அழகு பார்ப்பதும்.


விடுமுறை தினங்களில்
தினம் இது நடக்கும்,
ஒரு நாளில் முடிவெடுத்தேன்
செட்டியாரை கைக்குள் போட,


அன்று சனிக்கிழமை,
ஒண்ஒரையில்லை இரண்டரைதோசை
தெந்திச் செட்டியார் வரும் வரும் என
வாசலைப் பார்த்து மதியமுமாச்சு.


அப்பா அவசரமாய் வந்து
அம்மாவிடம், "வெளிக்கிடுமப்பா
செட்டியார் செத்துப்போச்சாம்" என்றார் -என்
ரெண்ணரைத்தோசையும் காய்ந்துபோய்க்கிடக்க.






("மண்புட்டு" கவிதைகளில்)