My Blog List

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ........................... -சிறுகதை

"ஹெய்.....ய் போய்ஸ் அன் கேள்ஸ், கம் அன்ட் ஜேயின்ற் வித் அஸ் கம்.கம்"

உற்ஷாகமாய் கத்தியபடி கெவின் பெண்கள் இருந்த பக்கமாய் வந்தான். டான்ஸ் பண்ணிக்கொண்டே வந்தவன் எல்லோரையும் வட்டமடித்து அங்கமர்ந்திருந்த ஆண் பெண் என அனைவரையும் தன்னுடன் இனைத்துக்கொண்டான் மீதமாய் இருந்த மற்றவர்களையும் இணைக்கும் நோக்குடனேயே மறுபக்கமாய் போனில் பிஸியாக இருந்த அந்த பெண்ணையும் கையைப்பிடித்து இழுத்தான்.
திரும்பாமலே கையை உதறிய அவள், திரும்பி அவனை முறைத்தாள், ஆனால் முறைக்க மடியாமல் கோபம் பனியாய் இறங்கிப்போனது.

"சூடாய்க்கிடந்த அவளது இதயத்தில் ஜஸ் கியுப்புகள் உருண்டன"
அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன ஆனால் அதை வெளிப்படுத்தாமலே
"இவன் அவனாக இருப்பானோ? கடவுவே அவனாக இருந்தால் உனக்கு கோடி நன்றி"
என மனதோடு பேசியவள் தன் நினைவுகளை வெளியே காட்டாமல் அவனைக்கவனிக்க ஆரம்பித்தாள்.

து "கிறீன்லண்ட்" கோட்டல் லண்டனில் தமிழர்களிடையே குறிப்பாக இலங்கைத்தமிழர்களிடையே ஓரளவு பிரசித்தி பெற்றகோட்டல். சுமதி-லக்சியின் நண்பி, சுமதியின் மகளின் பிறந்தநாள் பார்ட்டிக்காக வந்திருந்தாள் லக்சி.
பொதுவாக அவளுக்கு இப்படி பார்ட்டிகளுக்கு வருவதில் அவ்வளவாக விருப்பம் இருப்பதில்லை, ஆனால் கடந்த பத்து வருடங்கட்கு முன்னிருந்த லக்சியோ வேறு. அவள் கலகலவென இருக்கும் இடத்தையே இரண்டு படுத்தி விடுவாள், தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோரையும் சீண்டி சந்தோசிப்பாள்.
இதற்குமாறாய் இப்பொழுதெல்லாம் அவள் வெயிலில் விழுந்த தாமரைபோல் உணர்வு செத்தவளாயும், வெளியே அலங்காரமாயும் திரிந்துகொய்டிருந்தாள்.
உலகவாழ்கை பிடிக்கவில்லை, சோகமாய் உள்ளேன், எனக்கு மனத்துன்பம் என இருந்துவிட்டால் வாழ்வும் இவ்உலக மனிதரும் தனக்காய் பரிதாபப்படுவதுபோல் நடிப்பார்களே அன்றி உண்மையில் யாரும் தனக்காக இரக்கப்படவோ உதவவோ முன்வரமாட்டார்கள் என அவள் நன்றாய் உணர்ந்திருந்தாள். இதனால் உயிர் இருக்கும் வரை வாழத்தான் வேண்டும் என்பதை நடைமுறையில் கொண்டிருந்தாள்.
இருந்தும் அவள் இவ்வாறான பார்ட்டிகளுக்கு வருவது, குறிப்பிட்ட பல இலங்கைத்தமிழர்கள் சந்கித்துக்கொள்வார்கள் என்பதால், எங்கே தான் தேடுகின்ற அந்த முகத்தை இங்கே கண்டுபிடித்துவிட முடியாத என்ற நப்பாசையிலே தான். திரும்பிப் பார்த்தள் அந்த வாலிபனை அவன் ஆண், பெண் என எல்லோருடனும் சகஜமாக டாண்ஸ் பண்ணிக்கொண்டிருந்தான். திடீரென ஒரு பலத்த கைதட்டல், எல்லோர் முகங்களிலும் பல ரியுப்லைட் வெளிச்சம். "டாடி மம்மி வீட்டில் இல்லை" எனப்பாட்டு மபறியது தான் அதற்குக் காரணம். மிச்சம் மீதியாய் இருந்தவர்களும் எழுந்து டாண்ஸ்பண்ணத் தொடங்கினர்.

அன்னிய தேசத்தில் எம்மினப்பாடலில்கூட இவ்வளவு சந்தோஷம் வரக்கூடுமா என்ன?
*****
"எப்படி......................எப்படி சாத்தியமாகும். அதேசிரிப்பு, அதே கண்கள், அதே துருதுருப் பார்வை..............எப்படி........ எப்படி அவனாக இருக்குமோ? இல்லை அவனாய் இருந்திருந்தால் என்னை எப்படி மறந்திருப்பான்? சில வேளைகளில் பத்து
வருடங்களில் என் தோற்றம் மாறியதால் அடையாளம் தெரியவில்லையோ? அவன் பார்வையில் கூட என்னைத்தெரிந்ததற்கான அறிகுறிகள் சிறிதும் இல்லையே.......... சிலவேளை என்னை மறந்து வெறுத்திருப்பானோ? என்னை வெறுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை ஆனால் நிச்சயமாக மறந்திருக்க முடியாது.

"பீப்..........பீப்.பீப்........." கோண் சத்தம் ஒன்றொன்றாய் எழும்பத்தான் சிக்னல் விழுந்தும் தன் கார் இன்னும் மூவ் ஆகவில்லை என்பதை உணர்ந்து வேகமாய் அழுத்தினாள் அச்சிலட்டரை, அவள் மனதின் நினைவோட்டங்கள் போலே. லண்டன் சிற்றியின் றாபீக்கில் சிறு பயணங்களும் நிண்டநேரப்பயணங்களாகிவிடும் பல வோளைகளில். காரை வீட்டின் முன்னாக நிறுத்தியவள் வேகமாகச்சென்றாள் எங்கே தன் நினைவுகள் வேகமாய் தன்னையும் மீறி வெளியேறிடுமே என்ற அச்சத்தில் மிக வேகமாய் கதவைத்திறந்து சாத்தியவள் சோபாவில் போய்த்தொப்பென விழுந்தவள், கண்களையும் வேகமாய் மூடிக்கொண்டாள். 

லக்சி தன் தம்பியுடன் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் செல்லும் ரெயினில் பிரயாணித்துக்கொண்டிருந்தாள். 1999ல் தமிழ் சிங்களப்பிரச்சனை முனைப்போடிருந்த காலம், அருகில் தம்பி வேக்மன் செற்றை காதுகளில் மாட்டி கண்ணைமூடி ரசித்துக் கொணடிருந்தான், யன்னலின்வெளியே கண்களை மேய விட்டாள், ரெயின் மாநகரம் தாண்டி ஒரு ஸ்ரேசனில் நிக்க பலர்அவசர அவசரமாய் ஏறி சீற்பிடித்தார்கள். லக்சி அவர்கள் அவசரப்படும் அவஸ்தையைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பார்வையை வெளியே திருப்பினாள். எதிர் வெளிவாயிலில் நின்று ஒரு வாலிபன் தன்னை ரசித்துக் கொண்டிருப்பதைக் கணடாள், அவள் இதழ்களில் புன்னகை அரும்பியது பார்ப்பதற்கும் அவ்வாலிபன் கட்டழகனாய் இருந்தான். "அதுதான் திமிராய் சைற் அடிக்கிறானோ" என நினைத்தவள் தன் பார்வையை பெட்டியினுள் திருப்பினாள். ஒரு நடுத்தர வயதுத் தம்பதியினர் கைகளில் இரண்டு வயதுக் குழந்தை அது சினந்துசினந்து சிணுங்கிக்கொண்டிருந்தது இவள் அந்தக் குழந்தையைப்பார்த்துச் சிரித்தாள், குழந்தை அழுகையை விட்டு இவளைப்பார்க்க அவள் கண்ணடித்து முகபாவங்களால் முத்தமிட்டாள், அக்குழந்தை ஆண்குழந்தையாக இருக்கவேண்டும் எனெனில் அது வெட்கப்பட்டு தன் தாயின் மார்பிற்குள் மறைந்துகொண்டது. லக்சிக்குச் சிரிப்பு வந்தது உதடுகளைச் சுழித்துச் சிரித்துக்கொண்டே மறு புறம் திரும்பினாள், நேராகஇருந்த வாயிலில் சாய்ந்து கொண்டு அதே பார்வையுடன் அந்தக் கட்டழகனான திவாகர் அவளையும், அவள் சிரிப்பையும் ரசித்துக்கொண்டிருந்தான். லக்சி அலட்சியமாய் மறுபக்கம் திரும்பி கண்களை மூடிக்கொண்டாள்.

லக்சியும் தம்பியும் அப்பா அம்மா என அழகான சிறிய குடும்பம். கொழும்பு கொல்பிட்டியில் வீடு, றோயல் கொலீச்சில் படிப்பு என வசதி வாய்ப்புகளும் உண்டு. லக்சி தன் மாமி மகள் திருமணத்திற்காக வவுனியா, செட்டிக்குளம் சென்றுகொண்டிருக்கிறாள். லக்சியை விட மாமி மகளான கீர்த்தி 3வயது முத்தவள். லக்சியின் பெற்றோர் பிஸ்னஸில் பிசியாகஇருந்தமையால் பிள்ளைகள் இருவரையும் அனுப்பி வைத்திருந்தனர்.

என்னதான்கண்ணை மூடினாலும் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. நிமிர்ந்து உர்க்காந்து வெளியே பார்த்தாள், குருநாகல் ஸ்ரேசன். தன் முன்சீட் காலியானதைக்கவனித்தவள் அதில் திவாகர் வந்தமர்ந்ததை கவனிக்கவில்லை.
திவாகர் அழகான வாலிபன் கொஞ்சம் குறும்பும் ஒட்டியிருந்தது.யாராவது அம்சமான பெண்களைப் பார்த்தால் சீண்டிப்பார்ப்பது அவனுடைய வழக்கம். ஆனால் தன் சீண்டலைச்சாட்டை செய்யாத அவளை அவனுக்கு அப்படியே ரெயினில் இருந்து தள்ளிவிடலாம் போல் தோன்றியது. கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரமாகியும் அவளிடம் எந்த சலனத்தையும் ஏற்படுத்த முடியவில்லையே என அவன் மனம் அவனைக்கேலி செய்தது.

அவளின் முன் சீட் காலியாக வந்தமர்தவன் எவ்வித உணர்ச்சியுமின்றி உர்க்கார்ந்திருந்தான், இவள் சிங்களத்தியா? தமிழா? எதுவுமே தெரியவில்லையே, ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறார்கள். நான் சைட் அடித்ததைப் பார்த்தவள் ஏன் முறைக்கவில்லை? அப்போ சிங்களத்தியே..........? என யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு எதிர் சீட் பெண் தன்னைப் பார்த்ததை உணரவில்லை.
லக்சிக்கு நெஞ்சில் ரோஜா வருடிச்சொன்றது, திவாகர் தன்னை ரசிக்கிறான் என்பதைத்தெரிந்து ஒரு புன்னகையுடன் மறுபக்கமாய்த் திரும்பிக் கொண்டு தூங்க ரை பண்ணினாள்.
அவளைப் பார்த்துக்கொண்டிருந்தவன் மனசில் ஒருவிதமான சிலிர்ப்புத் தோன்றியது, மழைத்தூறல்கள் இதயத்தை நனைப்பதைப் போன்ற குளிர்ச்சி, ஏதோ தனியாக இருக்க வேண்டும் போன்ற உணர்வு, "தான் பார்த்தால் பின்னோடு தன்னைத் தொடரும் பெண்களில்" இவளை அவனுக்குப்பிடித்துப் போனது. ஆனால் தன்னைக் கணக்கெடுக்காத அவள் முன்னால் இருக்கப்பிடிக்காது தூரமாய்ச்சென்று அமர்ந்துகொண்டான்.
சில மணிநேரம் கழித்து விழித்த லக்சியின் மனம் அவளை அறியாமலே அவனைத் தேடின. அவளுக்கு அப்போது தன் தோழி சென்ன ஒரு விடயம் ஞபகம் வந்தது "எந்தப்பெண்ணுக்கும்தன்னை ஒரு ஆண் ரசிக்கிறான் என்றால் சந்தேஷப்படுவாளே அன்றி கோபப்படமாட்டாள், ஆனால் வெளியே கோபமாய்க்காட்டிக்கொள்வாள்"
ரெயினில் இருந்து இறங்கியபோதும் அவள் கண்கள் அவனைத்தேடின, ஆனால் காணவில்லை. அவள் இதயம் அழகாய் வலித்தது, ஏதோஒன்றைத் தொலைத்த உணர்வுடன் மாமா அனுப்பிய காரில் ஏறிக்கொண்டாள் மனசு மட்டும் அங்கேயே சுழன்றுகொண்டிருந்தது.

கொண்டிருந்தான்.அவளில் உண்மையான காதல் தோன்றியதாய் உணர்ந்தான், அதை அவளிடமும் பல விதங்களில் உணர்த்தினான். லக்சிக்கு மனசு ஏதோ தடைவிதித்தாலும் அதையும் மீறி அவனிடம் மனதை முழுதாக இழந்துவிட்டாள்.
கெட்டிமேளத்துடன் காலை மங்களகரமாக விடிந்தது, க்சி
நீவக்கலரில் பட்டுப்புடவை கட்டி, தலையில் மலலிகை மெட்டுக்களாலான மாலையும் சூடியிருந்தாள். திருமண வீட்டில் பாடல் சத்தம் செவிப்பறையைதிர்வித்துக்கொண்டிருந்தன, அதனிடையே
"வாரார்...............வாரார் மாப்பிள்ளை வாரார் ஆராத்திப் பெண்டுகள் எல்லாம் ஓடி வாங்கோ... வாங்கோ." எனப் பெண்ணின்தேப்பனார் ஆரவாரமாய் குரல் கொடுக்க, லக்சியும் மாப்பிள்ளையைப் பார்க்கும் ஆவலில் மாமாவின் பின்னால் ஓடினாள். "தலையில் தலைப்பாகை வைத்து மாப்பிள்ளை சூப்பரா.............ரா.ய்"
என நினைத்த லக்சிக்கு இதயம் நின்று வேகமாய்த் துடித்தது, கண்களைத்துடைத்து மீண்டும் வடிவாய்ப் பார்த்தாள் மாப்பிள்ளையை, ஆம் அவன் தான் நின்றுகொண்டிருந்தான். தலையில் தலைப்பாகையும் கையில் மலர்க்கொத்துமாய். கண்களில் வெளிச்சம் திடீரெனத் தொலைந்ததைப்போல் இருந்தது, அவளுக்கு அவன் திவாகர் ரெயினில் பார்த்த அதே அவன் கண்களில் வியப்பும், உதட்டோரம் அரும்பிய புன்னகையுமாய் அவனும் இளையே பார்த்தான். அவன் பார்வையில் ஓர் ஏழனம் இருந்ததைப்போல் இருந்தது. தன் உணர்வுகளைக் கண்டிருப்பானோ? என எண்ணியவளுக்கு அதற்குமேல் அங்கே இருக்கப் பிடிக்காமல் ஏதுசெய்வதெனத்தெரியாமல் பின்பக்கமாய் சென்று அங்கு போடப்பட்டடிருந்த கதிரை ஒன்றில் நிதானமாய் அமர்ந்து கொண்டாள். கண்கள் நீரைப்பிரசவிக்க திடுக்கிட்டுப்போனாள் அவள். என்ன இது? எதற்காக நான் அழவேண்டும்? என தன்னைத் தன்னிடமே மறைக்க முற்பட்டாள். அழகாய்ப்பட்ட திருமண வீடு ஏனோ இப்பொழுது பயங்கரமாய்த் தோன்றியது. எரிச்சலாய் இருந்தது. முதல் முறையாகத் தான் அசிங்கமாய் இருப்பதைப்போல உணர்ந்தாள்.
"ஏனடி பிள்ளை இதில இருக்கிறாய்? மாப்பிள்ளை பக்கமும் வந்திட்டினம் இன்னும்கொஞ்சத்தால முகூர்த்தமும் வந்திடும் வா முன்னால போவம் மாப்பிளையையும் அப்பிடியே இன்ரடியுஸ் பண்றன்"எனக் கூறிக்கொண்டே அவளின் பதிலை எதிர்பார்க்காமல் கையைப்பிடித்து அழைத்துக்கொண்டு சென்றார் லக்சியின் மாமி. அவளால் மறுக்க முடியாமல் அவரின் பின்னாடியே சென்றாள்.

மாப்பிள்ளைவீட்டார் இருந்த பக்கமாய் அழைத்துக்கொண்டு போனார் லக்சியின் மாமி. "இவர் தான் மாப்பிளை, இவள் என் அண்ணண் பொண்ணு, அவரால வர முடியல்ல பிள்ளைகளைஅனுப்பி வைச்சிருக்கிறார்"
எனக்கூறிக்கொண்டிருந்தவர்
"நீ இங்க பேசிக்கொண்டிரு மாமா குரல் கேக்குது பாத்திற்று வாறன்'
எனக்கூறி வெளியேறினார். இதற்குமேலும் ஒன்றும் பேசாமல் இருந்தால் மற்றவர்கள் தன்னைத்தப்பாகப்பார்ப்பார்கள் என எண்ணி
"கலோ நைஸ் ரு மீற் யு"
எனப் பார்த்தும் பார்க்காததுமாய் கான்சோக் பண்ணியவளுக்கு சைற்றில் இருந்து இன்னுமெரு கையும் வந்தது
" ஐ ம் திவாகர் நைஸ் ரு மீற் யு"
யாரிது விவஸ்தையே இல்லாமல், என மனதிலே திட்டிக்கொண்டு வலுக்கட்டாயமாய் புன்னகையை இழுத்துப்பிடித்துக்கொணடு "கலோ'
என கான்சேக் பண்ணியவளின் கையை அவன் விடவே இல்லை, கோபமாக நிமிர்ந்தவளின் கண்கள் இமைக்க மறந்து வியந்து நின்றன.

என்ன மாப்பிள்ளையை மாற்றி விட்டார்களே...............? சீச்சீ மாப்பிள்ளைத் தோழனைப்பார்த்தே அவள் ஏமார்ந்து போயிருக்கிறாள். அவளைத்திடீரென நாணம் தொற்றிக்கொண்டது. மெதுவாய் நிமிர்ந்து அவனைப்பார்த்தாள். அவன் கண்கள் அவளுக்கு ஆயிரம் கதைகள் செல்லின, ஏதோ இறக்கை முளைத்தால் போல் அவள் உணர்வுகள் வான்நோக்கிப் பறந்தன.

லக்சி தனக்குள் ஏற்பட்ட மற்றங்களை உணரத்தொடங்கினாள். திருமணவீட்டில் அவனுடைய செயல்களும், பொறுப்பாக அவன் நடந்துகொண்ட விதம், என அவளை அவன் வெகுவாகக் கவர்ந்து கொண்டான். அவளின் இளைய மனசில அவனுடைய செயல்கள் ஆசைகோடி விதைத்தன. அவன் ஒவ்வொரு தடவை அவளைப்பார்க்கும் போதும், கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னிலையை இழந்துகொண்டிருந்தாள். திவாகருக்கு லக்சியை ரொம்பவும் பிடித்துப்போய் விட்டது. அவளை எப்பிடியாவது தன் சொந்தமாக்கி விடவேண்டும் எனதுடித்து
திவாகர் தன் காதலை அவளிடம் வெளிப்படையாகவே தெரியப்படுத்தினான், அவன் காதல் அவளுக்கு வேர்பலாவாக சுவைக்க எதையுமே யோசிக்காமல் ஒத்துக்கொண்டாள். அதன் பின் இருவரின் காதல் "காவியம் தோற்றிடுமோ" என இருக்தது. அங்கிருந்த காடு, குளம், கோவில்கள் என பரந்து விரிந்தது. திவாகரின் கைகளில் லக்சி சிறு குழந்தைபோல விழுந்து கிடந்தாள்.
ஒரு நாள் இருவரும் தனியாக "பாவக்குளம்" பார்க்கப்போவதாகச் சென்றனர். அது "குளக்கோட்டனால் கட்டப்பட்ட சரிதடதிரச்சிறப்பு வாயந்த ஒரு குளம்". அங்கே நிறைய நேரத்தை செலவிட்டார்கள், இருவரும் ஒன்றாகக் குளித்தார்கள், வளிந்தோடும் நீரில் நனைந்த படி கையைப்பிடித்தபடி நீண்ட நேரமாக உர்க்கார்ந்து இருந்தார்கள், அந்த அமைதியில் வான்பாயும் ஓசை அழகாய்க்கேட்டுக்கொண்டிருந்தது, திவாகரே அந்த மைனத்தைக் கலைத்தான்.
" லக்சி.............. லக்சி'"
அவள் அவன் அருகாமையில் ஒன்றிப்போயிருந்தமையால் அவன் அழைத்தது அவளக்குக் கேட்கவில்லை, மீண்டும் அவன் அவளது முகத்தை தன் கைகளில் ஏந்தி,
"லக்சி என்னை மறந்துவிடுவியா ?"

லக்சிக்கு எல்லாமே எங்கேயோ சொர்க்கத்தில் நிகழ்வது போல் இருந்தது, எதனையுமே உணரமுடியாத நிலையில் அவள் அமர்ந்திருந்தாள். ஆனால் ஏதோகேட்கிறான் என்பது புரிந்து தலையை மட்டும் ஆட்டினாள். திவாகர் தொடர்ந்து,
"கோய் இது வெறும் காதல் மட்டுமல்ல என் உயிரையும் உன்னட்ட தந்திட்டன் நீ என்ன வெறுத்திட்டாலோ மறந்திட்டாலே என் உயிர் தாங்காது நீ என்னை ஏமாத்த
மாட்டியே ........" என ஆதங்கமாய்க் கேட்டான். அதற்கு அவள்
"உஸ்ஸ்ஸ்............." என அவனது உதடுகள் மீது கையை வைத்து தவையை ஆட்டினாள். பின் அவளது உதடுகளில் அழுத்தமாக முத்தமிட்டாள்.
"இப்படிப் பேசுறதுக்கு என்ன நீர் இந்தக் குளத்துக்குள்ள பிடிச்சுத்தள்ளி
விட்டிரலாம்" என்றாள் கண்களில் காதல் வழிய. அப்பொழுது திவாகர் தன் கழுத்தில் கிடந்த செயினைக் கழற்றி அவள் கழுத்தில் போட்டான், அவனைப்பொறுத்தமட்டில் அது தாலியாகவே இருந்தது அவளும் அப்படித்தான் நினைத்தாள், அவளும் தன் கைகளில் இருந்த மோதிரத்தை கழற்றி அவனுக்கு மாட்டி விட, அவன் அவளை இறுக அனைத்துக் கொண்டா
ன். வெளிச்சம் விலகிக் கொண்டிருந்தது ஆனால் அவர்கள் விலகவே இல்லை ஏதேதோ பேசினார்கள், அப்படியே அணைந்த படி.
ஒரு வாரம் இப்படியே ஓட, அவரவர் பிரிந்து வீடுசெல்லும் நாள் வந்தது, லகிசிக்கு அழுதழுது முகம் வீங்கி விட்டது. அவனுக்கும் அதே உணர்வுதான். அவன் யாழ்ப்பாணம் செல்ல அவள் கொழும்பு நோக்கிப்புறப்பட்டாள். இடையில் ஏதேதோ ந
டந்தது
லக்கியின் பெற்றோரை இராணுவம் பயங்கரவாதத் தலைகள் என சுட்டுக்கொல்ல, அவசர அவசரமாக லக்சி லண்டனுக்கு ஏற்றி அனுப்பப்பட்டாள். யாழ்ப்பாணப் பாதை முடப்படஅவர்கள் தொடர்புகள் மெத்தமாகத் துண்டிக்கப்பட்டுவிட்டன ஆனாலும் லக்கி
இன்னும் இவனைத் தேடிக்கொண்டேயிருக்கிறாள். எத்தனை திருமண சம்மந்தம் வந்தும் அவனுக்காகவும் அவனட காதலுக்காகவும் இன்று வரையும் அவனைத் தேடிததேடிக் காத்திருக்கிறாள். எப்படியும் அவன் கிடைத்துவிடுவான் என்ற நம்பிக்கையில்.

"ட்ட்றிறிங்ங் ட்ட்றிறிங்ங் ட்ட்றிறிங்ங்"
லக்சி திடுக்கிட்டு தன் நினைவிகளிவிருந்து விடுபட்டு எழுந்து போனை ஆன்சர் பன்னினாள். 
லக்சிக்கு பாட்டியில் பார்த்த 'கொவினை'"ப்பற்றி விசாரித்து அவனுடைய PN நம்பர் வாங்கி அவனுடன் தொடர்பு கொண்டு, அவன் திவாகர் இல்லை என்பதை தொரிந்துகொண்டாள். ஆனால் அவன் சொன்ன சேதி அவளுக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது. "கெவினும் அவனும்ஒனறு விட்ட சகோதரர்கள்" என்றும் அவன் இப்பொழுது வாவுனியாவில் தான் இருக்க வேண்டும் என்பதும்.

லக்சி ஓரு தீர்மானத்துடன் ரிக்கற்ரிங் ஒப்பீசக்கு இலங்கைக்கு ரிக்கற் பக் பண்ண
phone பண்ணினாள். ஆனால் கடவுள் இவள் கைகளால் அவன் கல்லறைக்கு மலர்க்கொத்து வைக்கவைத்திருக்கின்றதைப் புரியாமல்.

****************************