My Blog List

Sunday, March 28, 2010

உஸ்ஸ்ஸ்ஸ்...................ஸ் சத்தமிடாதீர்கள்


உஸ்ஸ்ஸ்ஸ்...................ஸ்ஸ்
சத்தமிடாதீர்.........!
உங்கள் காலடியில் நசுங்கும்
சருகுகளின் சரசரப்பும் கூட
உறங்கிக்கொண்டிருக்கும்
மைந்தர்களின், எம் மாவீரர்களின்
கனவுத்தூக்கத்தை
கலைத்துவிடக்கூடும்,

ஆதலில் உங்கள்
பாதங்களைக் கூட
பவித்திரமாகப்பதித்து அவர்
பாத மண்ணிலேயே செலுத்துங்கள்
மலர்களையும், மாலைகளையும்,
உங்கள் கண்ணீர் மணிகளின்
ஒலிகளும் கூட
கலைத்துவிடலாம் அதலால்
அமைதியாகவே அதையும் செலுத்துங்கள்.

நீண்ட உழைப்பின்
நிம்மதியான தூக்கம்,
தூங்கட்டும் அவர்கள்.
விடியும் ஓசையும் அவர்க்கே
முதல்நாதமாய் ஒலிக்கும்.
அப்போது அவர்
தியாகத் தூக்கங்களின்
நிறைவு விழா நடக்கும்
நிச்சயமாய் ஒருநாள்,
அதுவரை
உஸ்ஸ்ஸ்...............ஸ்ஸ் சத்தம்போடாதீர்.

Saturday, March 27, 2010

நான் பார்த்ததேயில்லை

மாச் கடைசி
மக்கள் கூட்டம் மிதப்பது
மறுக்கமுடியாத ஒன்று
மெற்றாசில்,

ஆனாலும் இன்று
மிதமிதமாய்க் கூட்டம்
பட்டாசுவெடிகளுடன் வீதிகளில்
பறந்தன காகிதத்துகள்கள்.

படித்த நோட்டுக்களை
கிழித்து பறக்கவிட்டு
வானில் துள்ளிக் குதித்து
குதூகலித்தனர் சந்தோஷத்தில்.

பிளஸ் 2 எழுதியவரும்
ரெந்துப் பரீட்சைமுடித்த மாணவருமாய்
வீதியில் கூடி
விதவிதமாய் கும்மாளம்

பரீட்சைமுடிந்ததில்
என்ன ஒரு சந்தோஷம்
இப்படி நான் பார்த்ததேயில்லை
அப்பப்பா காதுகிழிகிறது பட்டாசில்.

சரித்திரமாக்கு


சோதனை வரும்போது
சோர்ந்து போனால்
சோம்பேறித்தனத்திற்கு
சூத்திரமாகிடும்- அது.

சோதனைகள் தாக்கும்போது
வீழ்ந்துவிட்டால்-நம்
வீரியத்தை முழுதாய்
விரயமாக்கிடும் அது.

போதனைகளைப்புறம் தள்ளாதே
புடம் போட்டுக்கொள்உனை,
சாதனைகள் சாதாரணமாய்
சஞ்சரிப்பவை அல்ல.

அடங்கும்வரை- நீ
மண்ணில் அடங்கும் வரை,
ஆர்ப்பரிக்கச்சொய்யுன் திறத்தை
திடம்கொண்டு செயற்படு.

எதிர்கால சந்ததியும் கூட
ஏந்தி வைப்பர் உன்
சாதனைகளை நிச்சயம்
சரித்திரமாய்.

அதனால் நீ
சோதனைகளைக் கண்டு மிரளாதே,
வேதனையில் துவளாதே,
வெறிகொண்டு உழைத்திடு.

ஆர்த்மாத்தமான உயிருடன்

எத்துணை வேசங்களால் மறைந்தாலும்
நாமனைவருமே ஏங்கிக்கொண்டிருப்போம் -நம்மையும்
ஆர்த்மாத்தமாய் நேசிக்கக்கூடிய ஓருயிர்
உலகில் இருக்கக்கூடுமா.................?.........

ஆனால்
ஆர்த்மாத்தமான ஓருயிர்
எனக்காய் உண்டென
உணர்கிறேன் நான் !!

உனை என்னவென்று செல்வது
எண்ணும் போதெல்லாம் வந்துவந்து போகிறாய்
எதனால் ?......................
தோன்றும் போதே மறைந்து போகிறது.

என்னையும்..................
என் கவிகளையும் அழகாக்கியவன் நீ
என் கவிகளினுள்ளேயுள்ள
உயிர்த்துடிப்பை உணர்த்தியவன்.

நான் படிகளில் தடுக்கிய வேளைகளிலெல்லாம்
தானாக வந்து தாங்கியவன்
தவறானவற்றை மறுத்தவன்-நான்
நிறைவான போது உயிரைமட்டும்நேசித்தவன்.

உலகம் எனை ஏசியபோது
எனை ஏந்தியவன்- அதே
உலகம் எனை ஏந்தியபோது
ஒதுங்கி நின்று ரசித்தவன் நீ.

ஆர்த்மாத்தமாய் ஒர் உயிர்
எனக்காகவும் உளது -அதுநீயாய்
அறிகிறேன். -நான்
இறந்த பின்னும் உணர்வுடன்.

உன்அந்த ஒரேயெரு கண்ணிர்த் துளிபோதும்
எனக்கான ஆர்த்மாத்தமான ஆன்மாவாய்
என் கல்லறையிலும் உனை
உணர்வேன்- நேசிக்கும் உயிர் நீயென.

உனக்கான ஆத்மாத்தமான ஓருயிர்
உலகில் இருக்குமா............................?
உனக்கு எப்போதாவது எண்ணத்தோன்னினால்- அது
நான் தானென உணர்த்த விரும்புகிறேன்.

இப்படிக்கு
-நான்.

கலப்பிலொரு இன அழிப்பு....

பசிக்கழுகிறது ஒருபிள்ளை
பள்ளிக்கழுகிறது மற்றொன்று
கொடுக்க இயலாமல்
மறுகும் தாய் கற்பை
கெடுக்கத் தயாராகிறது
அரசுக்கூலி......

புதிய சட்டங்கள்
குறித்த மண்
கதவுகட்கு தமிழ்க் கதவுகட்கு
தாழ்நீக்கம் செய்தல்
அந்தி சாய்ந்த பின்னும்
அடைத்தல் தடைச்சட்டம்

மெய்தீயிலிட்டு தமிழின்
மெய் தீட்டென ஆடையவிழ்த்து...
அவன் அம்மணத்தில்
சிம்மனங்கள் குதிக்குமிக்
கோரகோரம் முன்னொரு
சரித்திரத்தோடு சாகவில்லை....

எதிர்வீட்டுக் கல்சட்டை

போவதற்கு பொழுதுகள்
பிரியமில்லாத வேளைகள்,

அடிக்கடி கால்கள்
அந்தரப்படும் வாயிலுக்குச்சொல்ல,

எதிர்முனை கவரும் காந்தம்போல்
ந்நேரமும் கண்தேடும்

எதிர்வீட்டுக்கேற்றையும்
அங்குலாவும் அவரையும்,

அவர் நோக்கா நிமிடங்களில்
யான் நோக்கி மகிழுவேன்.

சிலவேளைகளில் அவர் பார்வை
எம் மதிலையும் தாண்டும்,

கவர்ச்சியான கட்டைக்கால்சட்டையும்
உடலொட்டிய ரீசெர்ட்டுமாய்

மிகமிக
அழகாய்த்தோன்றுவார்.

அடிக்கடி குறுக்குநெடுக்காய்
அவசரமாய் நடப்பார்,

தன்போல்ட் தலையை
கோதிக்கொண்டு-அந்த

அழகான
கால்சட்டைத் தாத்தா.

Sunday, March 21, 2010

அந்தோ பரிதாபம்


வாயிலைப் பார்க்கிறாள்-பின்
தூளியைப் பார்க்கிறாள்
தாழ்திறவாதே என ஏங்கியவள்
தாலாட்டுப் பாடுகிறாள்

"அழும் குழந்தைக்கு
அப்பா வருவார் ஆரிரரோ
கண்ணே மணியே கண்ணுறங்கு
காத்திருப்போம் நாம் ஆரிரரோ"

அழும் குழந்தையின் கண்ணீரோடு
அவள் கண்ணீரும் கலக்க
காத்திருக்கிறாள் அவளும்
மாதங்கள் பலவாய்....

மாலையிட்டவன் மண்ணிற்காய்
மாவீரனானது தெரியாமல்- அவள்
மறுபடியும் "அப்பா வருவார் ஆரிரரோ"
பாடினாள், இனியும் பாடுவாள்...........

அந்தோ பரிதாபம்........!

அன்பு அடைக்கும் தாழ்


வாழ்கை சிலவேளைகளில்
கடலின் ஆழத்தில் தத்தழிக்கும்
பல வேளைகளில்
ஆழத்தையே அடைத்தவிடும்.

ஆனால் அவையெல்லாம்
அடைக்கும் தாழ் "அன்பு"
மன வலியை,
வாழ்வின் வெறுப்பை,
இதய சோகத்தை,

சில வேளைகளில்
மரண நினைவுகளையும் கூட
மறக்கடித்துவிடும் சக்தியுண்டு
அதனாலோ- "அன்பு அடைக்கும் தாழ்".

கடவுள்?

கடவுள்
கைக்குள் அடக்கம்
சிலையாய்,

கடவுள்
பரதேசம் கடந்தவர்
பார்வைக்குள் படாமல்,

கடவுள்
நல்லவரைக் காப்பார்
நாட்கள் சென்றபின்,

கடவுள்
தடடினால் கொடுப்பார்
தட்டி விழவும்விடுவார்,

கடவுள்
இதுவரை என் புஜையறையில்
புக்களோடு விளையாடும் பொம்மைகள்.

பலமுறை அழைத்தேன்
சிலமுறைகூட வரவில்லை
பின் எதற்கு?

தலைமுறைகளும்
விதிமுறைகளை வைத்துவணங்கவா
கடவுள்..........?

ஸ்பொட் அவுட்


நான் படித்துக்கொண்டிருக்கிறேன்
லெனினுக்கு மரணமில்லை
என்ன திமிர் அதற்கு
இடையே ஓடி
அதன்மேல் உர்க்கார்ந்து.............
செமையா கோபமாச்சு எனக்கு
எவ்வளவு உன்னதமான நூல்லிது
எதையுமே சாட்டை செய்யாமல்
என்ன அடாவடித்தனம்

அவசரமாய் ஒருமுடிவெடுத்தேன்
யாரென்ன சொன்னாலும் கவலையில்லை
உலகே திரண்டு குற்றம் கூறினால்கூட
கொன்று விட முடிவுசெய்தேன்
மரணமில்லாத நூலின்
மீதமர்ந்தது மீணடும்ருசியாய்
எரிச்சல் உச்சமாகஎனக்கு
ஓங்கி ஒரு அறைவிட்டேன்

ஸ்பொட் அவுட்
ஐயோ பாவம்
லெனினுக்கு மரணமில்லை ஆனால்
மரணமதற்கு அதன்மேலமர்ந்ததால்
இரத்தம் கக்கி
இறந்துபோய்க் கிடந்தது
பரிதாபமாய் அந்த நுளம்பு..........!