My Blog List

யார் விஐயன் ?

சிங்கம் புணர்ந்து உருவான
சிங்கள வம்சத்தின் சிங்க மகனே இவன்.
இவனோடே வந்தது சிங்களம் இலங்கைக்கு.
இதனாலோ சிங்களத்தின் சின்னம் சிங்கக் கொடி...?.........!!

அறிவியல் ரீதியில் நம்
அன்னை நாடு உருவானவிதம்
தெளிவாயறியலாம்- ஆனால் பலர்
தெளிவடையா விடையங்கள் பலவுமுண்டு.

கிரேக்க புராணங்களிலும்
இந்திய புராணக்கதைகளிலும் ரசித்த பல
வேடிக்கையான காட்சிகளை
மகாவம்சத்திலும் நாம் காணலாம்.

இலங்கையில் சிங்கள வரலாறு
விஐயனும் அவனுடன்
வந்திறங்கிய எழுநூறுவருடனும்
ஆரம்பிப்பதாய் கூறுகிறது ''மகாவம்சம்".

யாரிந்த விஐயன் ?
சிங்கம் புணர்ந்ததில் சிங்களமாய் தோன்றியவனே இவன்.

இந்திய வடமேற்கின்
வங்க மன்னரின் மகள் சுபதேவி.

இவளை வனராஜசிங்கம் கடத்தி
குகையில் அடைத்தது
குடும்பம் நடத்தியதில் கிடைத்த
குழந்தைகள் ஆணொன்றும் பெண்ணொன்றும்.

ஆணானது சின்கபாகூ,
பொண்ணானது சின்கவலி.

சிங்கராஜா வாயிலையடைத்து
சிறைவைத்திருந்தாலும்
குழந்தைகளுடன் தப்பினாள்
குகையிலிருந்து சுபதேவி,

சிறையிலிருந்து தப்பி, பின் சின்கபாகூ
சிங்கராஜாவை அம்பொய்து கொன்றான்.

சின்கபாகூ அதன்பின்
சின்கவலியான தன் தங்கையை தானே
திருமணம் செய்து
சின்கபுரத்தை மையமிட்டு அரசமைத்தான்.

இவர்கட்குப் பிறந்தது இரட்டைக்குழந்தை
இழையதாய் சுமித்தாவும், விஐயன் முன்னதாயும்.

தீயகுணங்களில் வழர்ந்து அதன்
திறவு கோலாயிருந்த விஐயனும், அவன்
கூட்டத்தார் பலரும்மிழைத்த கடும்
கொடுமைகளால் கொதித்தனர் மக்கள்.

மன்னிக்காது ஒரேதீர்ப்பாய் விஐயனுக்கு
மரணதண்டனை வழங்க உறுத்தினர்.

சிகன்பாகூ சிந்தித்தார் தன்
வயோதிபமையால் அவர் தள்ளாடியமையால்
விஐயனையும், அவன் கூட்டத்தையும்
நாடுகடத்த உத்தரவிட்டார்.

இவர்கள் தம்பபன்னியில் தரையிறங்கினர்
இலங்கையின் இன்னுமொரு பெயரே "தம்பபன்னி".

***

கதையின் நியாயத்தன்மைகளில்
வேறுபட்ட விவாதங்களுமுண்டு
வங்க அரசுக்கும் கலிங்க ராணிக்குமே
கருவான சுபதேவியை அவர்

எதிரியான "சின்கா"
எடுத்துக் காடேகியிருக்கலாமென.

***

வங்கம் என்பது இன்றைய
வங்கதேசம்- மேற்கு வங்கமும் சேர்த்து.
கலிங்கமானது இன்றைய
ஒரிசாவைக் குறிக்கிறது.

ஆக இன்று வழர்ந்து நிற்கும் சிங்களத்தின் மூலவேர்
இந்தியத் துனைக்கண்டத்தை மையமாய்க்கொண்டதெனத் தொளிவாகிறது.

இலங்கைக்கு இரக்க வந்த விஐயன்
இராட்ச்சியம் ஒன்றை அமைக்கிறான்,
இலங்கைக்கு இவன் வந்த சமயத்தில்
இறையடியடைகிறார் புத்தர்.

அன்றே இவனுக்கு மரணம் விதித்திருந்தால்
எம் மக்களுக்கான மரணவிதிகள் மாற்றப்பட்டிருக்கும்.

***

இன்னும் தொடரும்
விஐயன் அமைத்த ராட்ச்சியத்துடன்..............,

ஈழவாணி

(ஆதாரம் - மகாவம்சம்)