My Blog List

Monday, March 21, 2011

மீண்டுமொரு நாட்குறிப்புநீயென்பது

நீணட பயணமென்பது புரிகிறது
உள்ளங்கைக்குள்

துயர் குடித்த நாட்களை மருவி
நான்கு நாட்குறிப்பின் பயணத்தில்
நனைந்து உப்பி
நீண்ட பயணமென்றிருந்தவுன்னை
நான்கு நாட் குறிப்போடு
கிழித்துப் போடமுடியவில்லை
வெறும் பயணச்சீட்டாய்

காதல் கவிதைகள்
எழுதுவதில்லையென பிரகடனங்கள்
கொடுத்த பின்பு
எப்படி வரைவதுனக்காய்.....

முன்னைய தோற்றுப்போன
உணர்விழந்த காதலோடு
எடுக்கப்பட்ட பிரகடனங்களின்
மீழ்நிலைகள் குறித்த
முடிவுகளுக்கான முன்னறிவுப்புகளுக்கு முன்பே
முன்மொழியப்பட்டிருக்கிறாய்
உள்ளுணராமலே என்
நான்கு நட்குறிப்பிற்காய்
வரைபட

இப்பொழுது
காதல் கவிதைகள் பற்றிய
சத்தியங்கள் சாத்தியமற்றதாக
உன்னைப்படிக்க ஒருமுறை துணிகிறேன்

உன்நகையணிந்தாய்
புன்னகையாய் சத்தமற்று
புதியயுத்திகள் காதலுக்கு எதற்கு
பழையதோடானதல்லோ இது
பருவம் பிந்திய மழையாய்
பயிரழிந்ததுபோல் உடனிருந்தென்
உயிரழிக்க

மூன்று முன்கிழிந்த பின்
இன்னுமொன்றாய்
வெறும் அமிலத்தின் நுரைகளாய்
காற்றுவாக்கில் கரைத்து விட்டாய்
காதல் சுவாசித்த களப்பை
கருகி நிக்க
வாழைத்துண்டங்களாய்
விறைத்த நிறுவல்களோடு

இன்னுமொரு நாட்குறிப்பு
இடமுடியுமெனத்தோன்றவில்லை
ஏனெனில்
வளரும் மூங்கிலோ
வளரவிருக்ககும் மாவோ அல்ல

உலுப்பி விடப்பட்ட கிழைகளையுடைய
உதிர் காலத்தின் ஆசை
புரிந்திருப்பின் உன்னாசை
என்னாசை புரியாதிருப்பின்

மீண்டுமொரு நாட்குறிப்பு
இம்மடலோடிட தூண்டுமென்பது
என் மனசு நீ நோக்கி
உன் வீச்சில் வீழ்வது
இன்னுமொரு
தாழோ? நாளோ?

Saturday, March 5, 2011

ஏமாற்றம்

எனக்காய் உன் அழைப்புகள்
எதுவுமே இன்னும் வரவில்லை
ஏமாற்றம்
உன்னாலான ஏமாற்றம்
அப்படியிருக்க முடியாதிது
உன்னைத் தொலைத்து
உன்னுள் தொலைந்து
மீழ முடியாததின்
வலியாகத்தான் இருக்க முடியும்
காரணம் நான் இறக்கப்பட்டதன்
காரணம் நீயென்பதன்
ரகஸ்சியம் உடைந்ததின்
ஏமாற்றம் உனை
இறக்கடித்துக்கொண்டிருப்பதே !

மாசியில் ஒரு மகிழ்ச்சியான மாலைப்பொழுது....ஒரு நாளை அழகான மாலைப்பொழுதாக அமைக்கமுடிந்தது இவர்களால் எழுத்தாளர் மதுமிதா, வசுமதி, உஷா , தேனம்மை , கவிதா, ஸாதிக்கா, யசோதாஎன்கின்ற சாரதா இவர்களுடன் நானும்இணைந்தருந்தேன். இவர்களில் எனக்கு ஏற்கனவேஅறிமுகமானவர் தேனான தேனம்மை மட்டுமே, கள்ஒத்த இவர் பேச்சில் களவாடிய உள்ளம் பல.நான்உட்பட. எப்பொழுதும் ஓர் அசாதாரண புன்னகையைஒட்டிக்கொண்டிருந்தார் மதுமிதா, நான் இருப்பதைஎப்பொழுதும் மறக்கக் கூடாது எனும்படியாகஉணர்த்தியபடி உஷா
ராமச்சந்திரன். எப்பொழுதும் போல் மௌனமான புன்னகையோடு வசுமதி வாசன், அவரைப்போலவே அழகாய். ஸாதிக்காவின் ரகஸ்ய சமயல் குறிப்புகளோடு தொடங்கி அஞ்சறைப்பொட்டியின் ரகஸ்சியத்தைப் போட்டுடைத்தார் எனக்கு தன்னுடைய எழுத்துக்களோடான ஈடுபாட்டைப் பற்றிப் பேசினார். வரையறைகளோடு இருக்கவேண்டிய முகப் புத்தக நேரங்களையும் சுட்டினார், பெரும்பான்மையானவர்களின் ஆமோதிப்புக்களோடு அவர் பேச்சுக்கள் தொடர்ந்தது. எனக்கு அவருடைய கலாச்சார விடையங்களோடான சில முரண்பட்ட கருத்துக்கள் இருந்தன.

வேறு ஓர் கருத்தரங்கிற்காக சென்றிருந்தாலும் இனிமையான சில அறிமுகங்களோடு அமைந்தமை மனதிற்கு மகிழ்ச்சியே. கடைசியாக வந்து இணைந்து கொண்டார்கள் கவிதாவும் சாரதாவும். சிரிப்பு என்பது நித்தம் என் இதழ்களில் தவழ்வதற்கே என்பதைப்போல் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார் கவிதா, அருமை. அதிசயம் ஆனால் உண்மை நானும் மதுமிதாவும் சந்தித்துக்கொண்டால் அது நிச்சயம் இந்த ஆண்டிற்குரிய மகாநாடாகத்தான் இருக்க முடியும், வலைப்பூவில் எழுதி புத்தகம் போட்ட முதல் நபர் நானாகத்தான் இருக்கமுடியும் எனவும் சுவாரஸ்யமாய் இருந்தது உஷாவின் உரையாடல். மதுமிதா எப்போதும் ஒரு அவதானத்தினூடே தன் பேச்சை தொடர்ந்ததை அவதானிக்க முடிந்தது அதில் கவனம் மிகையாகவே இருந்தது.

இப்படி ஓர் அருமையான பொழுதில் பங்குகொள்ளும் வாய்ப்பை எனக்கு அளித்திருந்தார் தேனம்மை
தேனம்மாவிற்கு நன்றியுடன்
ஈழவாணி.