My Blog List

காலி முகத் (முத்தத்) திடலோடு............ -ஒரு பகிரங்கமடல்.

காலிமுகத்திடலோ அது
காதல் முத்தத்திடலோ....? என்
...காதல் முத்தம் இன்னும் காயவில்லை.

பகிரங்கமாய் நான்வரைந்து
பறைசாற்றும் உண்மைகட்காய்
பலருமெனை மன்னிக்கவேண்டும்.

காலிமுகத்திடல் என்றதும்
"காதலின் முதல்முத்தம் இன்னும்
காதலனைப்பு..............."ஞபகங்கள் .

எமக்கு தெரியாததானாலும் தெரியும்.......
என் தங்கை,
என் அண்ணன்,

தம்பிமார், தோழர்கள்,
குறிப்பாக என் மச்சினிச்சி.
மறைந்திருப்பதாய் எண்ணிய பகிரங்கஇடம்.

இன்னும் பலருக்கும்
இனையாத சிலருக்கும்
மனதில் மலர்வது புரிகிறது எமக்கு.

இணைத்த காதல்கள்
இளமை நினைவுகளென
இனமத பேதமின்றி.

இங்கே
காதலும் வழியும்,
காதலரும் வழிவர்.

வெம்மை இவர்க்கு குளிரூட்டல்கள்,
மென்மைக் கூதலூடும் காற்றும்
பூகாத வண்ணமான அணைப்பு.

குடைகள் இவர்க்கு
தேசிய சின்னம் -இங்கே
கலர்கள் பேசப்பட மாட்டாது.

காலையும் மாலையும் இருப்பர்.
மதியமும் இவர்க்குச் சுடாத
மலர்ந்த பல உணர்வுகளோடு..........

*****

பத்து வயதிருக்கும்
பள்ளிச் சிறுமி நான்
பார்க்கச் சென்றேன் முதன்முதலாய்.

சென்றோம், பார்த்தோம்,
கடலோடு கலந்து விளையாடி
மீதமும் பார்த்தோம் !

அம்மாவுக்கு அவசரம்
அழைத்துச் செல்வதில் வீட்டுக்கு,
விடலைகளின் விளையாட்டைப் பார்க்காமல்.

தன் சேலைத் தலைப்பை
அடிக்கடி விசிறி
அந்தரமாய் மறைப்பாள்.

அந்தரங்கம் இழந்து பலர்
அதரங்கள் சுவைப்பதை நம்
இதயங்கள் பதித்திடாத பயம்.

அதையும் மீறி அம்மா
முன்னால் சென்றதும்
பின்னால் தலைநீட்டுவேம்.

ஆச்சர்யம் !!!
சோடி சோடியாய் இங்கே
குடைக்குள் என்ன குடியிருப்பு ?

*****

இப்பொழும் சிலிர்க்கிறேன் -நானும்
முதல் முத்தம் குளித்த -காலி
முகத்திடலை எண்ணி.

கால்கள் புதைந்த பின்னோடு
நீராட்டி நிரப்பும்
நீரலைகளைப்போல்.

அலையாய் ஆர்ப்பரிக்கும்
அந்தரங்க நினைவுகள் -காலி
முகத்திடலோடு உண்டெனக்கும்.


மீண்டும் பின்னொரு நாளில்-சில
மீட்டல்கட்காய் சென்றோம் -காலி
முகத்திடலுக்கு, முடியவில்லை....!!

அதியுயர் பாதுகாப்பு வலயமாம்,
அழகை.... கடலழகை ரசிக்க
அனுமதி வேணுமாம்.

குறிப்பாய் நம்மினத்தமிழரை
குறிப்பெடுத்து பின்
தூக்குவராம் விடியமுன்னே !

தமிழரெலாம் இங்கே
தகாதவராம் மொத்தமான
சந்தேகம் பயங்கரவாதியாக்க.

காதலைத்தேடி அங்கே
காற்றோடு கூடி நின்று -பின்
உயிரையோடவிட எனக்குத்தேசமில்லை.

அதனால்
அலைபேசும் ஒலி சுமந்து
வீதியோடு போனோம்.

கரையவில்லை காதல்
நம்மூடு, கலைந்துபோய்க்கிடக்கிறது
நம் கனவுகள்...............?