
ஒரு நாளை அழகான மாலைப்பொழுதாக அமைக்கமுடிந்தது இவர்களால் எழுத்தாளர் மதுமிதா, வசுமதி, உஷா , தேனம்மை , கவிதா, ஸாதிக்கா, யசோதாஎன்கின்ற சாரதா இவர்களுடன் நானும்இணைந்தருந்தேன். இவர்களில் எனக்கு ஏற்கனவேஅறிமுகமானவர் தேனான தேனம்மை மட்டுமே, கள்ஒத்த இவர் பேச்சில் களவாடிய உள்ளம் பல.நான்உட்பட. எப்பொழுதும் ஓர் அசாதாரண புன்னகையைஒட்டிக்கொண்டிருந்தார் மதுமிதா, நான் இருப்பதை

வேறு ஓர் கருத்தரங்கிற்காக சென்றிருந்தாலும் இனிமையான சில அறிமுகங்களோடு அமைந்தமை மனதிற்கு மகிழ்ச்சியே. கடைசியாக வந்து இணைந்து கொண்டார்கள் கவிதாவும் சாரதாவும். சிரிப்பு என்பது நித்தம் என் இதழ்களில் தவழ்வதற்கே என்பதைப்போல் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார் கவிதா, அருமை. அதிசயம் ஆனால் உண்மை நானும் மதுமிதாவும் சந்தித்துக்கொண்டால் அது நிச்சயம் இந்த ஆண்டிற்குரிய மகாநாடாகத்தான் இருக்க முடியும், வலைப்பூவில் எழுதி புத்தகம் போட்ட முதல் நபர் நானாகத்தான் இருக்கமுடியும் எனவும் சுவாரஸ்யமாய் இருந்தது உஷாவின் உரையாடல். மதுமிதா எப்போதும் ஒரு அவதானத்தினூடே தன் பேச்சை தொடர்ந்ததை அவதானிக்க முடிந்தது அதில் கவனம் மிகையாகவே இருந்தது.
இப்படி ஓர் அருமையான பொழுதில் பங்குகொள்ளும் வாய்ப்பை எனக்கு அளித்திருந்தார் தேனம்மை
தேனம்மாவிற்கு நன்றியுடன்
ஈழவாணி.
13 comments:
மிக்க நன்றி ஈழவாணி..
அடக் கடவுளே.. ஸாதிகாக்கா தெரிய வேண்டாம் என கேட்டுக் கொண்டதால் ஃபோட்டோவை வெட்டி போட்டேன். நீங்கள் இருக்கும் ஃபோட்டோவை ஏன் போடவில்லை..
என்னையும் வெட்டிவிட்டீர்கள் தேனம்மா. (சும்மா).
ஈழவாணி அழகிய முறையில் விவரித்து நீங்கள் ஒரு பக்கா ஜர்னலிஸ்ட் என்பதினை உறுதிப்படுத்திவிட்டீர்கள்.அழகாகவும்,சுருக்கமாகவும் கருத்தரங்கினை எழுதிய விதம் அருமை.வாருங்கள் என் பக்கங்களுக்கும். வேர்ட் வெரிஃபிகேஷனை நீக்கி விடுங்களேன்.
மேடம் நீங்க இருக்கும் படம் அனுப்பி வைக்கிறேன் .. போடுங்க.. என் முகப்புத்தக ஃபோட்டோவில் இருக்கீங்க..
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி வாணி.
ஆனா, கவனம், அவதானிப்புன்னு நீங்க எழுதினது எல்லாம்.... கொஞ்சம் மிகைதானே:)
///மதுமிதா எப்போதும் ஒரு அவதானத்தினூடே தன் பேச்சை தொடர்ந்ததை அவதானிக்க முடிந்தது அதில் கவனம் மிகையாகவே இருந்தது.///
இது ச்ச்ச்ச்சும்மா தானே. இவ்விஷயத்தில் உங்கள் கவனம் மிகை:))))))))
நன்றி வாணி. நான் போட்ட கமெண்ட் எங்கே காணோம். இதையும் பாருங்க.
http://madhumithaa.blogspot.com/2011/03/blog-post_08.html
நன்றி ஸாதிக்கா
என்ன வேர்ட் வெறிபிக்கேஷன், புரியவில்லை.
அப்படியே செய்கிறேன் தேனம்மா
அப்படியில்லையே மதுமிதா, அது உண்மைதான்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..
உங்களது தமிழ் அருமை அம்மா.
எங்களது பிள்ளைகளுக்கு தமிழ் வாசிக்க தெரியவில்லை. மிகவும் வருத்தமான விஷயம்.
வாழ்த்துக்கள் அம்மா.
Post a Comment