வாயிலைப் பார்க்கிறாள்-பின்
தூளியைப் பார்க்கிறாள்
தாழ்திறவாதே என ஏங்கியவள்
தாலாட்டுப் பாடுகிறாள்
"அழும் குழந்தைக்கு
அப்பா வருவார் ஆரிரரோ
கண்ணே மணியே கண்ணுறங்கு
காத்திருப்போம் நாம் ஆரிரரோ"
அழும் குழந்தையின் கண்ணீரோடு
அவள் கண்ணீரும் கலக்க
காத்திருக்கிறாள் அவளும்
மாதங்கள் பலவாய்....
மாலையிட்டவன் மண்ணிற்காய்
மாவீரனானது தெரியாமல்- அவள்
மறுபடியும் "அப்பா வருவார் ஆரிரரோ"
பாடினாள், இனியும் பாடுவாள்...........
அந்தோ பரிதாபம்........!
3 comments:
ஜெயா அவள் தாலாட்டு பாடட்டும் குழந்தை தூங்கட்டும். அவர்களுக்கு இடையுறு செய்யாமல் நெஞ்சில் ஈரம் உள்ளவரை அவர்களுக்காய் அழுவோம், அந்த மாவீரனின் கனவுகளை காப்போம்.
தந்தை இறந்தாலும் தன் உயிரை தன் குழந்தைக்கு கொடுத்து விட்டு தான் அந்த மாவீரன் உறங்குகிறான்...........
தந்தை இறந்தாலும் தன் உயிரை தன் குழந்தைக்கு கொடுத்து விட்டு தான் அந்த மாவீரன் உறங்குகிறான்...........
Post a Comment