மனசுக்குள்
இன்று வாராதோ
நாளை வாராதோ என
எதிர்பார்த்த நாள்
வந்தது,
நான் அவனுக்காய்
மட்டும் என்பது
எனக்குத் தெரியும்.
ஆனால் அவன்
எனக்கு மட்டுமாய்
என்பதில் தெளிவானே?
திருமண சந்தோஷங்களை விட
இரு மனங்களிலும்
காயங்களே அதிகம்.
காயப்படுகிறது எனத்தெரிந்தும்
காயப்படுத்துவதில் பலருக்கு
இன்பம்.
இன்னும் காயங்களின்
கண்ணீருடன்
மீண்டும் விடிகிறது
விடியலில் வெளிச்சம்
மனசுக்குள்
புரியாத இருள்.........,
No comments:
Post a Comment