வாசம் ஒன்று என்
வாசல் வரைவந்து தீண்டியது
தென்றல் என்
கன்னம் தொட்டுப் பேசியது
காதல் ஓசை
மெல்ல மனசைக்குழைக்க
அது
நீண்ட தென்றலாகி
ஒரு அழகான
குழலிசையாகவே இருக்க
மூங்கிலில் பட்ட புண்ணாய்
என்னுள் ஒரு பிரதிபலிப்பு
இசையாய் அணைகையில்
மூங்கில்
நெருப்பில் காய்ந்தது
நெஞ்சில் சுட்டது
எல்லா சந்தோஷங்களுக்கும்
முன்ஓடினால் மிகுவலி தெரிகிறது
புல்லாங்குழலான மூங்கிலைப்போல்.
No comments:
Post a Comment