வாழ்வின் அர்த்தங்கள்
வாழும் நாட்களில்
வழங்காது பலசமயம்.
திரும்பிப் பார்க்கும்போதே
திடீரெனத் தோன்றும்
சிலவை பற்றி,
பின்னைய சந்தோஷங்களின்
மொத்தமான சேமிப்பே
முன்னைய சோதனைகளென,
வாழ்வின் சுவாரஸ்யங்கள்
இடறிவரும் சோதனைகளிலேயே
சார்ந்திருக்கும்.
வாழ்வை வெல்லல்
வெறும் அதிஸ்ரம்மட்டுமல்ல
வியர்வை சிந்தும் உழைப்புமே.
வாழ்வை வென்றுபார்க்க
வந்து இடறும்
சோதனைகளை சோதித்துப்பார்ப்போம்.
சோதனைகளின்
பின்னாடியியே சிறந்த
சித்திகள் பெறப்படுகின்றன.
வாழ்வைப் படித்து
சோதனைகளைத் தாண்டுவோம்
சிறந்தோடிவரும் வாழ்வு.
No comments:
Post a Comment