
எதற்காய்
இத்தனை பெரிதாய்
எனக்குத்தண்டனை,
தூரதேசம் சென்றாலும் என்
தூயஅன்பு உனை
தொடரவில்லையோ?
என் சிரித்த
அழகியமுகம்
உனைப்பயமுறுத்தியதில்லையே?
உன் தனிமை
உணர்த்தியிருக்குமே
என் உள்ளத்தை,
கண்ணீர் கூட
விட்டிருப்பாயே என்
காதலை எண்ணி?
இரகசியங்கள் பல
நமக்கு மட்டுமாயே
தெரிந்தவற்றை நீ
அடிக்கடி யோசித்து
அழுதும் இருப்பாய் என்பதில்
ஐயமில்லை எனக்கு.
என் பிரியாணி வாசம்
உன் பசித்த வயிற்றில்
என்னை நிறைத்திருக்குமே?
சண்டைகளைக் கூட
சரித்திரமாய் எண்ணி
ரசித்திருப்பாயே?
இவை எல்லாம்
நிகழ்ந்திருந்தால் நீ
இன்னும் என் பிரியமானவனே.
யாரும் நுளையமுடியா
அவசர அணைப்புடன்
அன்புடைய நான்.
***
1 comment:
காதலில் பட்டுத்தேர்ந்த வரிகள் என்னை பின்னோக்கி யோசிக்க வைக்கிறது.பாராட்டுக்கள் jeya
Post a Comment