உயிர்ப்போராட்டம்,
தெற்கிலே
பட்டும்(B) போளும்(B) போராடும்.
ரசிகர்களோடு
பைவ்ஸ்ரார் புட்டும் திண்டாடும்,
யாரிங்கே
வின்னர்?
முட்டாள்கள்
அரசின் படுகுளியில் விழுந்தவர்கள்.
இங்கே
மக்களைத்திருப்ப கிறிக்கற்
அங்கே
மக்களை மாய்க்க யுத்தம்,
ஒவ்வொரு தமிழனாய்
தண்ணிகூட இன்றி சாகடிப்பர்
தரைப்படை வான்படை
கடற்படையால்
விதவிதமய் சண்டைகள்
ஈழத்தின் இறுதிக்குடி சாகும்வரை,
வீட்டின்மேல் குண்டுமழை
ரோட்டில் துப்பாக்கிச்சூடு
உடனேயும் சாவுகள் நடக்கும்
உடலுறுப்புப்போய் ஊனமாய்
துடிதுடித்து லேற்றாயும்
சாவுகள் நடக்கும்.
குழந்தை, குமருகள்
கற்பிணி. தாய்மார்கள்,
இனிவேண்டாம் தமிழினம் என
ஈவிரக்கமின்றிக் கொல்வர்
ஓடியவர்க்கு உணவில்லை
ஒடிந்தவர்க்குத் மருந்துமில்லை
துடிதுடிக்கிறது வடக்கு.....
படபடப்பு தெற்கில்
பள்ளி மாணவர்கள்
பருவத்துப்பிள்ளைகள்
வயசு வராதவர்கள்
வயசு போனவர்கள் என
வீட்டில் T.V யுடன் வெயிற்றிங்
கடைகண்ணி கிறவுண்டிலும்,
யார் வின்னர்?
அங்கே அனைத்தையும் மண்ணாக்க
அரசு மீண'டும் நடத்தும்,
முக்கோணப்போட்டி.
மீதமானால் தமிழினம்.............!
1 comment:
உங்கள் வலைத்தளம் மேலும் சிறப்புற வாழ்த்துக்கள் சகோதரி
உங்கள் கவிதைகளில் என்னைக் கவர்ந்தது இந்தக் கவிதை தான்
Post a Comment