என் மனம் கொன்ற
மன்னா,
உன் வரம்வேண்டி
என்னுயிர் இதயவாசலில்
தவம் கிடக்கிறது.
அந்த நாட்களை
நீ தரவேண்டி
நோன்பிருக்கிறது.
இதயத்தின் துடிப்புக்கூட
இடியாய்த்தான் கனக்கிறது
இன்னும் இன்னும் இறக்கிறது.
வலி பாரம் சோகம்
வேதனை என அத்தனையும்
ஒன்றாய் நேருகிறதே.
உன்னோடு உறைந்து
உன் கனவோடு மயங்கி
உயிராடிப் போகிறதே.
நீயாக என்னுள்
நியமாக உருகி
எனதான நாட்களை எண்ணி.
ஒன்றாய் சேர்ந்து
கொஞ்சமாய் அழுது
நிறையவே சிரிக்க,
என் விடியல்
உன்பார்வையில் மலர
உதயம் நீயாக,
உன்னோடு உண்ண
உன்னோடு உடைய
நம்மூடு ஊடலிட,
ஒன்றாய் நனைந்து
ஒன்றாய் காய்ந்து
ஒன்றாக வாழ வாஅன்பே.
வாழ்கை- நாம்
வாழும் மட்டும்தான்
துரத்தும்.
வாழ்வை நாம்
துரத்திப்பிடிப்போம்
கைகளைக்கோர்த்து வா.
உன் அதரங்களின்
இன்பரசம் மட்டும்போதும்
என் உயிர் வாழ.
சொட்டு விஷமானாலும்
அது எனக்கு
தேவாமிர்தமே.
உயிரைக்கூட
உடைத்து விடலாமென
உரைக்கிறது உள்ளம்.
இன்னும் இறுதியாய்
இதயம் கேட்கிறது
மீண்டும்,
மாயவண்ணம் கொண்டு
மறைந்து நின்று
மரணத்தை தாராதே,
உன் அம்புகள்பட்டு
இறக்கும் முன்னே
வந்துவிடு அன்பே ஓடோடி.
***
No comments:
Post a Comment