உஸ்ஸ்ஸ்ஸ்...................ஸ்ஸ்
சத்தமிடாதீர்.........!
உங்கள் காலடியில் நசுங்கும்
சருகுகளின் சரசரப்பும் கூட
உறங்கிக்கொண்டிருக்கும்
மைந்தர்களின், எம் மாவீரர்களின்
கனவுத்தூக்கத்தை
கலைத்துவிடக்கூடும்,
ஆதலில் உங்கள்
பாதங்களைக் கூட
பவித்திரமாகப்பதித்து அவர்
பாத மண்ணிலேயே செலுத்துங்கள்
மலர்களையும், மாலைகளையும்,
உங்கள் கண்ணீர் மணிகளின்
ஒலிகளும் கூட
கலைத்துவிடலாம் அதலால்
அமைதியாகவே அதையும் செலுத்துங்கள்.
நீண்ட உழைப்பின்
நிம்மதியான தூக்கம்,
தூங்கட்டும் அவர்கள்.
விடியும் ஓசையும் அவர்க்கே
முதல்நாதமாய் ஒலிக்கும்.
அப்போது அவர்
தியாகத் தூக்கங்களின்
நிறைவு விழா நடக்கும்
நிச்சயமாய் ஒருநாள்,
அதுவரை
உஸ்ஸ்ஸ்...............ஸ்ஸ் சத்தம்போடாதீர்.
4 comments:
அருமையான கவிதை வாழ்த்துக்கள்.....
//விடியும் ஓசையும் அவர்க்கே
முதல்நாதமாய் ஒலிக்கும்.
அப்போது அவர்
தியாகத் தூக்கங்களின்
நிறைவு விழா நடக்கும்
நிச்சயமாய் ஒருநாள்,//
உங்கள் கவிதைகள் அனைத்தும் படித்தேன் ..
அனைத்தும் அருமை ..
மேலும் தொடர்ந்து எழுத வேண்டுதல்களோடு
விஷ்ணு ..
தோழரே மறைந்துவிட்ட மாவீரர்களைக்கூட தூங்கச்செய்யாதீர்கள்.இழந்துவிட்டுச்
சென்ற தாய்க்கு,பிள்ளைக்கு, ஒவ்வொரு உறவுகளுக்கும். 'தெய்வமும்,பூதங்களுமாய் நம்பிக்கையும் பயத்தையும் காலங் காலமாய் இருவேரு நிலைகளில் மக்களிடம் தக்கவைத்திருப்பதுபோல்' மறைந்த மாவிரர்கள் ஒன்றுக்குள் இரண்டாக ஈழ எல்லை எங்கும் விழித்து உலவட்டும். விடியும் வரை.
'nampuzhuthi.blogspot.com'
மிக்க நன்றி
நிச்சயமாக தொடர்வேன் ஆரோக்கியமான எழுத்துக்களோடு..
Post a Comment