வயது பதினொன்று
வாடாமல்லியில் கொள்ளைப்பிரியம்.
வீட்டைச்சுற்றி
விதைக்காத இடமில்லை
வாடா மல்லியை.
சடநாகம் சொய்துஎனக்கு
சடங்கானதும் சூடவென்றாள்
சங்கடச்சிரிப்போடு.
தானொத்த சிறுமியர்
தலையில் சூடியதில்
தனக்கும் நிறைய வேண்டுமெனஆசை
முற்றமிரு பரப்பிலும்
நிறைந்து மலர்ந்திருக்க
மலர்ந்தாள் அவளும்,
நாளும் குறித்தாயிற்று
நான்கு நாள்தானிருக்க
நாராசமாய் விடிந்தது
ஊ........ய்ய்ய் என்று
கிபிர் ஒன்று பறந்து
வீசிய குண்டில்
வாகினி வீட்டு
கூரையிலும் விழுந்து
குடும்பமே போனது
சருகாகிப்போன
வாகினிக்குகுவிந்தன
வாடாமல்லி மாலைகள்.
சடங்காகிச் சூடவேண்டினாள்
அவள்-ஆனால் இனவாதம்
சருகாக்கிச்சூட்டுகிறது.
வாழவேண்டியவர்களைக
காக்க வோண்டிய அரசே
காவுகொள்ளும் கொடுமை
1 comment:
mmm supperb jaya
Post a Comment