சோதனை வரும்போது
சோர்ந்து போனால்
சோம்பேறித்தனத்திற்கு
சூத்திரமாகிடும்- அது.
சோதனைகள் தாக்கும்போது
வீழ்ந்துவிட்டால்-நம்
வீரியத்தை முழுதாய்
விரயமாக்கிடும் அது.
போதனைகளைப்புறம் தள்ளாதே
புடம் போட்டுக்கொள்உனை,
சாதனைகள் சாதாரணமாய்
சஞ்சரிப்பவை அல்ல.
அடங்கும்வரை- நீ
மண்ணில் அடங்கும் வரை,
ஆர்ப்பரிக்கச்சொய்யுன் திறத்தை
திடம்கொண்டு செயற்படு.
எதிர்கால சந்ததியும் கூட
ஏந்தி வைப்பர் உன்
சாதனைகளை நிச்சயம்
சரித்திரமாய்.
அதனால் நீ
சோதனைகளைக் கண்டு மிரளாதே,
வேதனையில் துவளாதே,
வெறிகொண்டு உழைத்திடு.
5 comments:
சரித்திரமாக்கு!
மனதுக்கு உற்சாகம் மட்டுமல்ல,உறுதியையும் ஊட்டும் கருத்துப் பெட்டெகம் இது.
நல்ல நடை;’நறுக்’கென்று உரை.
வெல்லப் பாகுடன் பழம் பிசைந்தாற் போன்ற படைப்பு!
தொடர்ந்து இந்த பாணியைச் சரித்திரம் ஆக்குக!
உங்கள் விமர்சனப் பின்னூட்டம் மிகவும் அருமை என்னை உற்சாகப்படுத்துகிறது
நன்றி தோழரே.
எழுதும் போதே யோசித்து முனைந்து,
எழுதியதன் பின் வாசித்துப் பார்த்துப்
பழுதற மகிழும் மனநிலை தோன்றின் பயன்மிகு எழுத்தைப் படைத்தவர் ஆவீர்!
தரமான சிந்தனைகளும் படைப்பும் தமிழுக்கு அணிகலன்கள்.அவற்றை
அணிவிக்கின்றவர்களை வாழ்த்துவது நம் கடன்.
Thank u Friend .
Post a Comment