பிரியமில்லாத வேளைகள்,
அடிக்கடி கால்கள்
அந்தரப்படும் வாயிலுக்குச்சொல்ல,
எதிர்முனை கவரும் காந்தம்போல்
எந்நேரமும் கண்தேடும்
எதிர்வீட்டுக்கேற்றையும்
அங்குலாவும் அவரையும்,
அவர் நோக்கா நிமிடங்களில்
யான் நோக்கி மகிழுவேன்.
சிலவேளைகளில் அவர் பார்வை
எம் மதிலையும் தாண்டும்,
கவர்ச்சியான கட்டைக்கால்சட்டையும்
உடலொட்டிய ரீசெர்ட்டுமாய்
மிகமிக
அழகாய்த்தோன்றுவார்.
அடிக்கடி குறுக்குநெடுக்காய்
அவசரமாய் நடப்பார்,
தன்போல்ட் தலையை
கோதிக்கொண்டு-அந்த
அழகான
கால்சட்டைத் தாத்தா.
2 comments:
ம்ம்ம்...
‘ஏதோ...காதல்,கத்திரிக்காய் சமச்சரம் இவருக்கும் போல்’ எரிச்சலோடு படித்த்..முடிக்கும் போது..’அடடா...அப்படி இல்லாமல் ..முதுமையின் துடிப்பான தோற்றத்தை நேர்த்தியாக நேசிக்கும் உணர்வையல்லவா காதலாகச் சித்தரிக்கின்றார்’ என்று வியப்போடு எண்ணச் செய்யும் படைப்பு.
’காதல்’என்றால் காமம் அல்ல;நேசிப்பு’ என்பதன் விளக்கம் இது.
உங்கள் ரசனையில் எனக்கு மகிழ்சியே
Post a Comment