My Blog List

Sunday, March 21, 2010

அந்தோ பரிதாபம்


வாயிலைப் பார்க்கிறாள்-பின்
தூளியைப் பார்க்கிறாள்
தாழ்திறவாதே என ஏங்கியவள்
தாலாட்டுப் பாடுகிறாள்

"அழும் குழந்தைக்கு
அப்பா வருவார் ஆரிரரோ
கண்ணே மணியே கண்ணுறங்கு
காத்திருப்போம் நாம் ஆரிரரோ"

அழும் குழந்தையின் கண்ணீரோடு
அவள் கண்ணீரும் கலக்க
காத்திருக்கிறாள் அவளும்
மாதங்கள் பலவாய்....

மாலையிட்டவன் மண்ணிற்காய்
மாவீரனானது தெரியாமல்- அவள்
மறுபடியும் "அப்பா வருவார் ஆரிரரோ"
பாடினாள், இனியும் பாடுவாள்...........

அந்தோ பரிதாபம்........!

அன்பு அடைக்கும் தாழ்


வாழ்கை சிலவேளைகளில்
கடலின் ஆழத்தில் தத்தழிக்கும்
பல வேளைகளில்
ஆழத்தையே அடைத்தவிடும்.

ஆனால் அவையெல்லாம்
அடைக்கும் தாழ் "அன்பு"
மன வலியை,
வாழ்வின் வெறுப்பை,
இதய சோகத்தை,

சில வேளைகளில்
மரண நினைவுகளையும் கூட
மறக்கடித்துவிடும் சக்தியுண்டு
அதனாலோ- "அன்பு அடைக்கும் தாழ்".

கடவுள்?

கடவுள்
கைக்குள் அடக்கம்
சிலையாய்,

கடவுள்
பரதேசம் கடந்தவர்
பார்வைக்குள் படாமல்,

கடவுள்
நல்லவரைக் காப்பார்
நாட்கள் சென்றபின்,

கடவுள்
தடடினால் கொடுப்பார்
தட்டி விழவும்விடுவார்,

கடவுள்
இதுவரை என் புஜையறையில்
புக்களோடு விளையாடும் பொம்மைகள்.

பலமுறை அழைத்தேன்
சிலமுறைகூட வரவில்லை
பின் எதற்கு?

தலைமுறைகளும்
விதிமுறைகளை வைத்துவணங்கவா
கடவுள்..........?

ஸ்பொட் அவுட்


நான் படித்துக்கொண்டிருக்கிறேன்
லெனினுக்கு மரணமில்லை
என்ன திமிர் அதற்கு
இடையே ஓடி
அதன்மேல் உர்க்கார்ந்து.............
செமையா கோபமாச்சு எனக்கு
எவ்வளவு உன்னதமான நூல்லிது
எதையுமே சாட்டை செய்யாமல்
என்ன அடாவடித்தனம்

அவசரமாய் ஒருமுடிவெடுத்தேன்
யாரென்ன சொன்னாலும் கவலையில்லை
உலகே திரண்டு குற்றம் கூறினால்கூட
கொன்று விட முடிவுசெய்தேன்
மரணமில்லாத நூலின்
மீதமர்ந்தது மீணடும்ருசியாய்
எரிச்சல் உச்சமாகஎனக்கு
ஓங்கி ஒரு அறைவிட்டேன்

ஸ்பொட் அவுட்
ஐயோ பாவம்
லெனினுக்கு மரணமில்லை ஆனால்
மரணமதற்கு அதன்மேலமர்ந்ததால்
இரத்தம் கக்கி
இறந்துபோய்க் கிடந்தது
பரிதாபமாய் அந்த நுளம்பு..........!

வாழ்வை வென்றுபார்


வாழ்வின் அர்த்தங்கள்
வாழும் நாட்களில்
வழங்காது பலசமயம்.

திரும்பிப் பார்க்கும்போதே
திடீரெனத் தோன்றும்
சிலவை பற்றி,

பின்னைய சந்தோஷங்களின்
மொத்தமான சேமிப்பே
முன்னைய சோதனைகளென,

வாழ்வின் சுவாரஸ்யங்கள்
இடறிவரும் சோதனைகளிலேயே
சார்ந்திருக்கும்.

வாழ்வை வெல்லல்
வெறும் அதிஸ்ரம்மட்டுமல்ல
வியர்வை சிந்தும் உழைப்புமே.

வாழ்வை வென்றுபார்க்க
வந்து இடறும்
சோதனைகளை சோதித்துப்பார்ப்போம்.

சோதனைகளின்
பின்னாடியியே சிறந்த
சித்திகள் பெறப்படுகின்றன.

வாழ்வைப் படித்து
சோதனைகளைத் தாண்டுவோம்
சிறந்தோடிவரும் வாழ்வு.

ஏன் ?



கருணை மட்டுமல்ல
காதலும் இதயத்திலிருந்தே
கனிகிறது எனக
கவிபாடிய நீ
கருணையைக் கூட
காட்டவில்லையே ஏன்?

??????


புல்லிற்கும் புழுவிற்கும்
விலைபேசும் சந்தைகளும்
எலும்புக்கூடுகட்கும் கற்சிலைகட்கும்
மாலைபோடும் மேடைகள் இறக்கும் வரை
"மனிதம்" விழிக்காது.